
காஞ்சிபுரம் செவிலிடுமேடு பகுதியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்கா வெளிப்புறத்தில் பளபளப்பாக ஜொலிக்கும் நிலையிலும், உள்புறத்தில் புதர் மண்டிய நிலையிலும் உள்ளது. இந்த பூங்காவை முறையாக பாமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் மொத்தம் 68 பூங்காக்கள் உள்ளன. இவற்றில் சுமார் 20 பூங்காக்கள் மட்டுமே பயன்படுத்தக் கூடிய நிலையில் உள்ளன. இவ்வாறு பயன்படுத்தக் கூடிய நிலையில் உள்ள பூங்காக்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.