
நேபாளம் நாட்டில் நடந்துவந்த மாணவர் போராட்டம் இன்று பெரும் வன்முறையாக மாறியிருக்கிறது. அமைச்சர்களின் வீடுகள், பிரதமரின் வீடு, நாடாளுமன்றம், உச்ச நீதிமன்ற கட்டடம் என அரசு தொடர்பான பல இடங்களையும் ஊடக அலுவலகங்களையும் போராட்டக்காரர்கள் சூறையாடியும், தீவைத்து எரித்தும் வருகின்றனர்.
வன்முறையின் ஒரு பகுதியாக முன்னாள் பிரதமர் ஜலந்த் கானலின் வீடு தீ வைக்கப்பட்டது. அதில் சிக்கிய அவரது மனைவி ராஜ்யலக்ஷ்மி சித்ரகார் உயிரிழந்ததாக செய்திகள் கூறுகின்றன. ஆனால் அதிகாரப்பூர்வ தகவல்கள் வழங்கப்படவில்லை.
BREAKING:
Rajyalaxmi Chitrakar, wife of ex-Nepali PM Jhalanath Khanal, got set on fire right inside her home and didn't make it—rushed to the hospital in bad shape but gave out from her injuries.
Khanal was pulled out by the Nepali Army just before the blaze hit… pic.twitter.com/LmsQ8QiDL9
— Thick Shelled Egg (@ThickShelledEgg) September 9, 2025
Protestors storm #Nepal parliament in Kathmandu as ministers flee in helicopters. pic.twitter.com/3QhgEDScui
— Ahmer Khan (@ahmermkhan) September 9, 2025
ஒரு ஊடக அறிக்கையில் கலகக்காரர்கள் ராஜ்யலக்ஷ்மியை அறையில் பூட்டி பின்னர் தீ வைத்ததாகக் கூறப்படுகிறது. மற்றொன்றில் அவர் கீர்த்திபூர் மருத்துவமனைக்கு தீ காயங்களுடன் அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
Nepal Violence
முன்னதாக நிதியமைச்சர் பிஷ்ணு பிரசாத் பவுடல் போராட்டக்காரர்களால் தாக்கப்பட்டு தப்பித்து ஓடும் காட்சிகள் பரவி வந்தன.
Nepal's Finance Minister is seen running on the street while people are chasing him. pic.twitter.com/xMY8cobUm2
— Vikrant (@Vikspeaks1) September 9, 2025
அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர்.
வெளியுறவுத்துறை அமைச்சர் அர்சு ராணா தியூபா வீட்டில் அவரும் அவரது மனைவியும் தாக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அமைச்சர்கள் மற்றும் அவர்களது குழந்தைகள் சுகபோக வாழ்க்கையை அனுபவிக்கும் சமத்துவமின்மை போராட்டத்தின் முக்கிய காரணியாக இருப்பதனால் அவர்களது இல்லங்கள் மற்றும் உடைமைகள் கொளுத்தப்படுவதாகப் பார்கப்படுகிறது.
ஆனால் போராட்டத்தில் வெளிநாட்டு சக்திகள் தூண்டுதலினால் வன்முறை அதிகரிப்பதாகத் தெரிவித்துள்ளது அரசு. எனினும் போராட்டக்காரர்கள் 19க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பே பெரும் வன்முறையைத் தூண்டியதும் குறிப்பிடத்தக்கது.