
சென்னை: “தவெக தலைவர் விஜய் சனிக்கிழமை மட்டும்தான் மக்களை பார்ப்பேன் என்பது ஏற்கத்தக்கது அல்ல. 24 மணி நேரமும் களத்தில் நிற்க வேண்டும்" என தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “பாஜக கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகிய இருவரும் இருக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். டிடிவி தினகரன் ஒரு நல்ல தலைவர். எங்களை வழி நடத்தி கொண்டிருப்பவர் நயினார் நாகேந்திரன். எங்கேயும் கருத்து வேறுபாடுகளுக்கு இடம் இருக்காது. காலம் கனிந்து வரட்டும். கொஞ்சம் பொறுமையாக இருக்கலாம்.