
‘பறந்து போ’ படத்தில் நடித்த மலையாள நடிகை கிரேஸ் ஆண்டனிக்கு திருமணம் நடைப்பெற்று முடிந்திருக்கிறது.
2016-ஆம் ஆண்டு வெளியான ‘ஹேப்பி வெட்டிங்’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் கிரேஸ் ஆண்டனி. அதன்பின், 2019-ஆம் ஆண்டு வெளியான ‘கும்பலங்கி நைட்ஸ் ‘ என்ற படத்தில் சிம்மி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து ‘ரோர்ஷாச்’, ‘தமாஷா’,’அப்பன்’ போன்று பல படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் 2022 ஆம் ஆண்டு வெளியான ‘சதுரங்க வேட்டை – 2’ நடித்திருந்தார். அதன்பிறகு சமீபத்தில் ராம் இயக்கத்தில் வெளியான ‘பறந்து போ’ படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் இன்று(செப்டம்பர் 9) கிரேஸ் ஆண்டனிக்கு திருமணம் நடைப்பெற்று முடிந்திருக்கிறது. இதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
ஆனால் அவரது கணவரின் முகத்தையோ, பெயரையோ அவர் பகிரவில்லை. இருப்பினும் திருமணம் செய்திருக்கும் கிரேஸ் ஆண்டனிக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கின்றனர்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…