
சென்னை: சமூக நீதி பாவங்களை செய்த திமுக, இனியாவது சமூக நீதி துரோகத்தையும், தூக்கத்தையும் களைந்து விட்டு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கர்நாடகத்தில் இரண்டாவது முறையாக சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை வரும் 22-ம் தேதி முதல் மேற்கொள்ளவிருக்கும் அம்மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், அதற்கான பயிற்சிகளை நேற்று முதல் தொடங்கியிருக்கிறது. கர்நாடக மக்களுக்கு சமூக நீதி வழங்க வேண்டும் என்பதற்காக அம்மாநில அரசு காட்டும் அக்கறையும், தீவிரமும் பாராட்டத்தக்கவை.