
வி.கே.புரடக்க்ஷன்ஸ் குழுமம் தயாரிப்பில் இயக்குநர் வ.கௌதமன் இயக்கி நடிக்கும் படம் ‘படையாண்ட மாவீரா’.
இந்தப் படத்தில் மன்சூர் அலிகான், ராதா ரவி, மொட்டை ராஜேந்திரன், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, ஆடுகளம் நரேன், இளவரசு, கிங்ஸ்லி என்று பலர் நடித்திருக்கின்றனர்.
செப்டம்பர் 19 இப்படம் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று (செப்.9) நடைபெற்றிருக்கிறது.
இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் தங்கர் பச்சன், ” கௌதமனுக்கு பத்திரிகையாளர்களாகிய நீங்க எல்லோரும் உதவனும். பணம் சம்பாதிப்பதற்காக ஏதோ ஒரு சினிமாப் படம் பண்ணனும்’னு நிறைய பேர் வராங்க.
அப்படி திரைத்துறைக்கு வந்தவர் அல்ல கௌதமன். அவன் ஒரு தமிழன் என்பதால் தான் சினிமாவை தேர்ந்தெடுத்திருக்கிறான்.
இங்க தமிழர்களுக்கு எதிரா நடக்கிற அரசியல் ஆகட்டும் , அடக்குமுறையாகட்டும், வன்முறையாகட்டும் அதையெல்லாம் தட்டிக்கேட்கிற தமிழன்தான் அவன். இங்க ஒடுக்கப்படுகிறது தமிழர்கள்தான்.
தமிழ்நாட்டில் அழிக்கப்படுறது, ஒழிக்கப்படுறது எல்லாம் தமிழர்கள்தான். அதே மாதிரி பிடுங்கப்படுறதும் தமிழ் நிலங்கள்தான்.
இதையெல்லம் பாதுகாப்பதற்காக அவ்வபோது தமிழ் மண்ணில் தோன்றிய மனிதர்கள் நிறைய பேர் இருக்காங்க. அது இலக்கியமாகவும், திரைப்படமாகவும் வருகிறது.
தொடக்கக் காலங்களில் எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் இருந்தது. வேற்றுமொழி காரர்கள் பிழைக்க வந்தவர்கள் அதிகாரத்தைப் பிடிப்பதற்கு மொழியை நல்லா கத்துகுறாங்க.

அதன் மூலம் அரசியலை ஆட்கொள்கிறார்கள். இதுதான் தொடர்ந்து நடந்துகிட்டு இருக்கு. இதுதான் இனிமேலும் நடக்கப்போகிறது. தமிழன் அல்லாதவுங்க தமிழனுக்குள்ளையே பகையை உண்டாக்குவாங்க” என்று பேசியிருக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், ” ஒரு நல்ல சினிமா இங்க வெற்றி பெற்றதை விடவும் மக்களுக்கு பயன்படாமல் இருக்கிற படங்கள்தான் அவர்களின் பணத்தைப் பிடிங்கி இருக்கிறது. அதுலதான் உங்க நேரத்தையும் தொலைச்சு இருக்கீங்க.
அப்படிப்பட்ட படங்கள் தான் கொண்டாடப்படுகிறது. அப்படிப்பட்ட நடிகர்கள், இயக்குநர்கள் தான் கொண்டாடப்படுகிறார்கள். இன்றைக்கு அரசியல்வாதிகளிடம் உள்ள பணத்தை விட இவர்களிடம்தான் அதிகமாக இருக்கிறது” என்று பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…