
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 அணி, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஆசியக் கோப்பைக்குத் தீவிரமாகத் தயாராகி வருகிறது.
இன்று (செப்டம்பர் 9) தொடங்கும் இத்தொடரில் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானும், ஹாங் காங்கும் மோதுகின்றன.
இதில், இந்தியா தனது முதல் போட்டியாக நாளை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை எதிர்கொள்ளவிருக்கிறது.
இந்த நிலையில், ஆசியக் கோப்பைக்கான பயிற்சியின்போது ஹர்திக் பாண்டியா கட்டியிருந்த வாட்ச் குறித்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
ஹர்திக் பாண்டியா கட்டியிருக்கும் இந்த Richard Mille RM 27-04 வாட்ச்சின் விலையானது, இதற்கு முன்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அவர் கட்டியிருந்த Richard Mille RM 27-02 வாட்ச்சின் விலையைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகம்.
அதாவது, Richard Mille RM 27-02 வாட்ச்சின் விலை ரூ. 7 கோடி, தற்போது அவர் கட்டியிருக்கும் Richard Mille RM 27-04 வாட்ச்சின் விலை ரூ. 20 கோடி.
இது, ஆசியக் கோப்பையை வெல்லும் அணி பெறக்கூடிய பரிசுத்தொகையான ரூ. 2.6 கோடியை விடக் கிட்டத்தட்ட 8 மடங்கு அதிகம்.
டென்னிஸ் ஜாம்பவான் ரஃபேல் நடாலுடன் இணைந்து உருவாக்கப்பட்ட மிகவும் பிரத்யேகமான இந்த வாட்ச் மொத்தமாகவே 50 யூனிட்டுகள் மட்டுமே உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதில் ஒன்று தற்போது ஹர்திக் வசம் இருக்கிறது.

ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி:
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணைக் கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஜிதேஷ் சர்மா, ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ரின்கு சிங், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, பும்ரா.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…