
சென்னை: வெளிநாட்டு சுற்றுப் பயணம் செல்லும் முன்பு 922 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 10.62 லட்சம்கோடி முதலீடு செய்து 32.81 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கிவிட்டதாக மார் தட்டும் முதல்வர் ஸ்டாலின் முழு விவரங்களையும் தைரியமாக வெளியிடத் தயாரா? என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2021, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது சுமார் 525-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் அளித்துவிட்டு தற்போது 90 சதவீதம் நிறைவேற்றிவிட்டோம், 95 சதவீதம் நிறைவேற்றி விட்டோம் என்று மேடைதோறும் பச்சைப் பொய் பேசி, மக்களின் காதுகளில் பூ சுற்றி வரும் திமுக ஸ்டாலின் மாடல் பெயிலியர் அரசு, சதவீத கணக்கில் 70 சதவீதம் என்றும், 77 சதவீதம் என்றும் முதலீடுகளை ஈர்த்தது பற்றி முதல்வர் ஸ்டாலினும், தொழில்துறை அமைச்சரும் முதலீடு வந்துவிட்டது போலவும், வேலை வாய்ப்பு லட்சக் கணக்கில் உருவாகிவிட்டது போலவும் (எக்ஸ் வலைதள) அறிக்கைகளை வெளியிடுகின்றனர்.