
சென்னை: “எத்தனையோ இடர்கள், எத்தனையோ தடைக்கற்கள், எத்தனையோ சூழ்ச்சி அரசியல்கள்… ஆனால், எந்த வகையிலும் திராவிட மாடல் அடிப்படையிலான தமிழகத்தின் வளர்ச்சியை தடுக்க முடியவில்லை” என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
முதல்வர் ஸ்டாலின் இன்று கோயம்புத்தூரில் நடைபெற்ற ‘இந்தியா டுடே மாநாடு 2025-ல் (தெற்கு)’ மாநாட்டில் காணொலி வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாடு இன்று இந்தியாவின் வளர்ச்சி எஞ்சினாக அனைத்து குறியீடுகளிலும் நம்பர் ஒன் மாநிலமாக திகழ்கிறது. இதற்கு அடித்தளமாக திராவிட மாடல் ஆட்சியின் சமூக நீதி, சமத்துவம், கூட்டாட்சி மற்றும் அனைத்துத் தரப்பு மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவை அமைந்திருக்கிறது.