
சென்னை: தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்களை காவல்துறை தாக்கியது தொடர்பாக விசாரணை நடத்த ஒரு நபர் ஆணையம் அமைத்து பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த வழக்கறிஞர்கள், தூய்மைப் பணியாளர்கள் சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டதாகவும், அவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தனர்.