
தவெக தலைவர் விஜய் தனது தேர்தல் சுற்றுப்பயணப் பிரசாரத்தை வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி சென்னையில் தொடங்க இருக்கிறார் என்று அக்கட்சியின் கழகப் பொதுசெயலாளர் என். ஆனந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
2026 ஆம் ஆண்டிற்கான சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. இதையொட்டி அரசியல் தலைவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நிலையில், புதிதாகக் கட்சி தொடங்கிய விஜய், சுற்றுப்பயணத்தைத் தொடங்க இருக்கிறார்.
இதுத்தொடர்பாக, தவெக கட்சியின் கழகப் பொதுசெயலாளர் திரு என். ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நான் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வருகிறேன்.
எங்கள் கழகத் தலைவர் விஜய் அவர்கள் இம்மாதம் 13ஆம் தேதி (13.09.2025) சனிக்கிழமை முதல் டிசம்பர் மாதம் 20ஆம் தேதி (20.12.2025) சனிக்கிழமை வரை, பின்வரும் அட்டவணைப்படி, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை மேற்கொள்ள இருக்கிறார்.

இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளின்போது, அந்தந்த இடங்களில் பொதுமக்கள் கூடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடக்கும் இடங்களில் போக்குவரத்தை முறைப்படுத்தி, தேவையான பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.