
சீனாவின் ஷென்ழெனை (Shenzhen) தளமாகக் கொண்ட Insta360 என்ற நிறுவனம், தனது ஊழியர்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அது தற்போது இணையவாசிகள் இடையே பெரும் கவனம் பெற்று வருகிறது.
சவுத் சைனா மார்னிங் போஸ்ட் செய்தி படி, Insta360 நிறுவனத்தின் ஊழியர்கள் தங்களது உடல் எடையை குறைத்தால், அதற்கான சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறது. அதாவது, அவர்கள் இழக்கும் ஒவ்வொரு 0.5 கிலோக்கும் 500 யுவான் (இந்திய ரூபாயில் சுமார் ₹6,100) வழங்கப்படும்.
ஊழியர்கள் பலரும் இதில் கலந்து கொண்ட நிலையில், ஷி என்ற ஊழியர் 90 நாட்களில் 20 கிலோவுக்கும் மேல் எடையை குறைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இதற்காக அவர் 20,000 யுவான் (சுமார் ₹2.47 லட்சம்) வென்றுள்ளார்.
தினசரி சரியான உடற்பயிற்சி
இது குறித்து அவர் கூறுகையில், “இது அழகு பற்றியது மட்டுமல்ல; ஆரோக்கியத்தை பற்றியது. கண்டிப்பான உணவுமுறை, தினசரி சரியான உடற்பயிற்சி ஆகியவற்றின் மூலம் தான் இவ்வாறு உடல் எடையை குறைத்தேன்” என்று ஷி தெரிவித்துள்ளார்.

ஆரோக்கியமான வாழ்க்கை
2022 ஆம் ஆண்டு முதல் இந்த திட்டத்தை அந்த நிறுவனம் தொடங்கி நடத்தி வருகிறது. இதுவரை 2 மில்லியன் யுவான் (சுமார் ₹2.47 கோடி) வெகுமதியாக வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு மட்டும், 99 ஊழியர்கள் சேர்ந்து மொத்தம் 950 கிலோ எடையை குறைத்து, 1 மில்லியன் யுவான் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
“ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேம்படுத்துவது, மேலும் ஊழியர்கள் வேலைகளைத் தாண்டி தங்களது உடல் நலத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதை ஊக்குவிப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம்” என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே…!