
புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடி முதல் வாக்கை பதிவு செய்தார். காலை 10 மணிக்கு முன்னதாகவே நாடாளுமன்ற வளாகத்துக்கு வந்த அவர், வாக்குப் பதிவு அறைக்குச் செல்லும்போது மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜிஜு மற்றும் ராம் மோகன் நாயுடு ஆகியோர் உடன் இருந்தனர்.
இதனையடுத்து, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அர்ஜுன் ராம் மேக்வால், கிரண் ரிஜிஜு ஆகியோர் வாக்களித்தனர். மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ், பாஜக எம்.பி கங்கனா ரனாவத் மற்றும் சமாஜ்வாடி கட்சித் தலைவர் ராம் கோபால் யாதவ் உள்ளிட்டோரும் வாக்களிக்க வந்தனர்.