
வி.கே.புரடக்க்ஷன்ஸ் குழுமம் தயாரிப்பில் இயக்குநர் வ.கௌதமன் இயக்கி நடிக்கும் படம் ‘படையாண்ட மாவீரா’.
இந்தப் படத்தில் மன்சூர் அலிகான், ராதா ரவி, மொட்டை ராஜேந்திரன், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, ஆடுகளம் நரேன், இளவரசு, கிங்ஸ்லி என்று பலர் நடித்திருக்கின்றனர்.
காடுவெட்டி குருவின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது என்று கூறப்படுகிறது.
செப்டம்பர் 19 இப்படம் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று (செப்.9) நடைபெற்றிருக்கிறது.
இதில் கலந்துகொண்டு பேசிய கவிஞர் வைரமுத்து, “சில இயக்குநர்களைப் பற்றிக் கேள்விப்படுகிறேன்.
அவர்கள் தங்களுடைய துணை இயக்குநர்களுக்குக் கூட கதை சொல்வது இல்லையாம். எனது ரகசியம் இவர் வழியாக வெளியே போய்விட்டால் என்ன பண்ணுவது என்று சிந்திக்கிறார்களாம்.
‘படையாண்ட மாவீரா’ படத்தில் உள்ள நம்பிக்கை என்னவென்றால் இது வாழ்க்கை, ரத்தம், கண்ணீர், வேர்வை, ஒரு உண்மையான போராளியின் போராட்டக்கதை. அதனால் இதில் கற்பனைக்கு இடமில்லை.
இதில் இருக்கும் நிஜம் இப்படத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கிறேன்.
நான் வாழ்த்தி ஒரு படம் வெற்றி பெற்றால் எல்லா விழாக்களுக்கும் என்னையே அழைத்திருப்பார்கள்.
நான் மட்டுமல்ல ரஜினிகாந்த் வாழ்த்தினால் எல்லா படமும் ஓடும் என்றால் எல்லா படத்திற்கும் அவரையே அழைத்து எல்லா படத்தையும் போட்டுக்காட்டுவார்கள்.
ஆனால் அது அப்படி அல்ல. ஒரு படத்தின் வெற்றி என்பது படத்தைப் பொறுத்தது, படத்தைப் பார்க்க வரும் தமிழர்களைப் பொறுத்தது.

இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகிறேன். வெற்றி பெற்றே தீரும் என்று நான் போலி வாக்குறுதிகள் கொடுக்க விரும்பவில்லை.
ஒலிபெருக்கிகள் முன்பாவது மக்கள் உண்மையைப் பேச வேண்டும். நல்ல விஞ்ஞானிகள் இருந்தால், பொய் சொல்லும்போது ஒருவரது முகத்தில் ஷாக் அடிக்கும் ஒலிபெருக்கியைக் கண்டுபிடிக்க வேண்டும்.
அப்படி ஒரு ஒலிபெருக்கி இருந்தால் நாட்டில் பல நன்மைகள் நடக்கும். முதலில் பாராளுமன்றம், சட்டமன்றம், பொது மேடைகளில் வைக்க வேண்டும்” என்று பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…