
சென்னை: அண்ணாவின் 117-வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரின் உருவச் சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி மரியாதை செலுத்துகிறார்.
இது தொடர்பாக, அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அண்ணாவின் 117-வது பிறந்தநாள் விழா அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலை அமைவிடத்தில் வரும் செப்.15-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பங்கேற்று மலர்கள் தூவி மரியாதை செலுத்த உள்ளார். அவரைத் தொடர்ந்து, தலைமைக்கழகச் செயலாளர்களும் மரியாதை செலுத்த உள்ளனர்.