
நேற்று இஸ்ரேல் ஜெரூசேலத்தில் தீவிரவாத தாக்குதல் நடைபெற்றுள்ளது.
கூட்டமான பேருந்தில் ஏறிய இரண்டு பாலஸ்தீனிய தீவிரவாதிகள் தூப்பாக்கி சூடு நடத்தியதாக தகவவல் வெளியானது. இந்தச் சம்பவத்தில் குறைந்தபட்சம் 6 பேர் இறந்துள்ளதாகவும், 12 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இன்னொரு பக்கம், எதிர்வினையாக, இஸ்ரேல் காசா மீது தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகிறது.
நெதன்யாகு எச்சரிக்கை
தற்போது இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, “இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி காசா மக்களுக்கு தெரிவித்துகொள்கிறேன். மிகவும் கவனமாக கேளுங்கள்: ‘இப்போதே காசாவில் இருந்து கிளம்ப’ என எச்சரிக்கை விடுக்கப்படுகிறது” என்று காசா மக்களை எச்சரிக்கிறார்.
சூறாவளியைப் போல – இஸ்ரேல் எச்சரிக்கை
மீதம் இருக்கும் பணய கைதிகளை விடுவிக்கவில்லை; காசா பகுதியில் வான்வழித் தாக்குதல்கள் மற்றும் தரைவழி நடவடிக்கைகள் “சக்திவாய்ந்த சூறாவளி” போல அதிகரிக்கும் என்று ஹமாஸை இஸ்ரேல் கடுமையாக எச்சரித்துள்ளது.
இஸ்ரேலின் தாக்குதல் மற்றும் எச்சரிக்கைக்கு எதிராக ஐ.நா. பாதுகாப்பு சபை குரல் கொடுத்துள்ளது.
நாளுக்கு நாள் இஸ்ரேல்–பாலஸ்தீனப் போர் மோசமாகி கொண்டே போகிறது. ஆனால் இதில் பெரிதாக பாதிப்படைவது மக்கள் தான்.