
சென்னை: பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமாரின் தாயார் பி.மீனாள் அம்மாள் (74) மதுரையில் நேற்று காலமானார். அவரது உடல் அஞ்சலிக்காக டி.குன்னத்தூர் அம்மா நினைவு மண்டபத்தில் வைக்கப்பட்டது.
மீனாள் அம்மாள் மறைவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அமைச்சர் தங்கம் தென்னரசு, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, செல்லூர் ராஜூ ஆகியோர் தொலைபேசியில் உதய குமாருக்கு ஆறுதல் கூறினர்.