
ஜப்பானின் இளவரசர் ஹிசாஹிட்டோ, வயது வந்தவராக (Adulthood), கடந்த 40 ஆண்டுகளில் முதல் ஆண் அரச குடும்ப உறுப்பினராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
19 வயதான இவர், பேரரசர் நருஹிட்டோவின் மருமகனாகவும் கிரிஸாந்தமம் அரியணையின் இரண்டாவது வாரிசாகவும் உள்ளார்.
இவருக்கு பிறகு ஆண் வாரிசுகள் இல்லாததால், ஆண்கள் மட்டுமே அரியணையை பெற முடியும் என்ற சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஜப்பானுக்கு அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
பல்கலைக்கழக படிப்பில் கவனம் செலுத்துவதற்காக ஒரு வருடம் தாமதமாக, இளவரசரின் வயது வந்தோர் விழா கடந்த சனிக்கிழமை அவரது குடும்ப இல்லத்தில் நடைபெற்றுள்ளது. அங்கு பேரரசின் தூதர்களிடமிருந்து பாரம்பர்ய கன்முரி மகுடத்தை பெற்றுள்ளார்.
”வயது வந்தோர் விழாவில் மகுடத்தை வழங்கியதற்கு மிக்க நன்றி. அரச குடும்பத்தின் வயது வந்த உறுப்பினராக என் பொறுப்புகளை உணர்ந்து என் கடமைகளை நிறைவேற்றுவேன்” என்று இளவரசர் ஹிசாஹிட்டோ கூறியிருக்கிறார்.
1985 ஆம் ஆண்டு இளவரசர் ஹிசாஹிட்டோவின் தந்தை, பட்டத்து இளவரசர் அகிஷினோவுக்குப் பிறகு, ஜப்பானில் இளவரசருக்கு நடைபெறும் முதல் பருவமடைதல் விழா இதுவாகும்.
பேரரசர் நருஹிதோவுக்கு 23 வயதான இளவரசி ஐகோ என்ற மகள் இருந்தாலும், 1947-ஆம் ஆண்டு அரச குடும்ப சட்டம் ஆண்களுக்கு மட்டுமே அரியணை உரிமையை வழங்குவதால், அவர் வாரிசு வரிசையில் இடம்பெற முடியாது.
தற்போது, அரச குடும்பத்தில் 16 வயது வந்த உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால், இளவரசர் அகிஷினோ மற்றும் இளவரசர் ஹிசாஹிதோ மட்டுமே இளம் ஆண் வாரிசுகளாக உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே…!