
பீகார் மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலையொட்டி பீகார் மாநிலத்தில் ‘சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி (Bihar SIR)’ மேற்கொள்ளப்படுகின்றது.
இந்த வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் முறைகேடுகள் நடப்பதாக காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி குற்றச்சாட்டை முன்வைத்து, தீவிரமாக களத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார். காங்கிரஸின் கூட்டணி கட்சியான திமுகவும் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்து ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவுத் தெரிவித்து வருகிறது.
இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி ‘வாக்குத் திருட்டு’ என்ற கோஷத்துடன் ஆர்ப்பாட்டங்களை முன்வைத்திருக்கிறார். இது நாடுமுழுவதும் பேசுபொருளாகி வருகிறது.
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடப்பதால் இங்கும் இதுபோன்ற வாக்குத் திருட்டு நடந்துவிடக்கூடாது என திமுகவின் கூட்டணி கட்சிகள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “நாடு முழுவதும் வாக்குத் திருட்டு நடைபெறுகிறது. தமிழகத்திலும் நடக்கிறது. இந்தியா முழுவதுமே காசு கொடுத்துத்தான் வாக்குகளை வாங்குகின்றனர். தமிழ்நாட்டிலும் காசு கொடுத்து மக்களின் வாக்குகளைத் திருடுகின்றனர். இதுவும் வாக்குத் திருட்டுத்தான்” என்று பேசியிருக்கிறார்.