
காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷ், இன்று நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நீதிமன்ற சிறைக்காவலில் வைக்க சிறைக்கு அழைத்துச் செல்ல முற்படும்போது தப்பி ஓடிய காணொலி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்த 30 நிமிடங்களுக்கு பின் சங்கர் கணேஷ், மீண்டும் கிளை சிறைக்கு அழைத்து வரப்பட்டிருக்கிறார். டிஎஸ்பி சங்கர் கணேஷ் தப்பி ஓடவில்லை என்று காஞ்சிபுரம்காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.
சம்பவத்தின் பின்னணி
காஞ்சிபுரம் மாவட்டம், பூசிவாக்கம் பகுதியில் ‘சிமெண்ட் முருகன்’ என்பவர், மற்றொரு நபருக்கும் தனக்கும் நடந்த அடிதடி சம்பவத்தில் தனக்கு உரிய நீதி வேண்டும் என்று காஞ்சிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இந்தப் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் புகார் அளிக்கப்பட்டு ஒரு மாத காலம் ஆகியும் காவல்துறை தரப்பிலிருந்து எந்தவித முன்னேற்றமும் இல்லை என்றும் முருகன் தரப்பில் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. குறிப்பாக பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் (SC/ST Act) கீழ் நடவடிக்கை எடுக்கவில்லை என்று வழக்குத் தொடுத்திருந்தார்
இன்று (செப்டம்பர் 8) இந்த வழக்கை விசாரித்த காஞ்சிபுரம் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி செம்மல், புகாரின் தீவிர தன்மையை எடுத்துரைத்து, ஒரு மாத காலமாகியும் காவல்துறை தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததைக் கண்டித்திருக்கிறார்.
மேலும், இப்புகாரை விசாரித்து, நடவடிக்கை எடுக்காமல் கடமை தவறியதாக காஞ்சிபுரம் மாவட்ட டிஎஸ்பி சங்கர் கணேஷை கைது செய்து செப்டம்பர் 22 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டிருக்கிறார்.

தப்பியோடிய காஞ்சிபுரம் டிஎஸ்பி, 30 நிமிடங்களில் மீண்டும் சிறைக்கு வருகை
இந்த நிலையில் காவலர்கள் டிஎஸ்பி சங்கரை காவலர் உடையிலேயே கைது செய்து சிறைக்கு அழைத்துச் செல்ல முயற்சி செய்தபோது, சங்கர் அங்கிருந்து காவல் வாகனத்தில் தப்பிச் சென்றுவிட்டார். இதுதொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதையடுத்த 30 நிமிடங்களுக்கு பின் சங்கர் கணேஷ், மீண்டும் கிளை சிறைக்கு அழைத்து வரப்பட்டார். டிஎஸ்பி சங்கர் கணேஷ் தப்பி ஓடவில்லை என்று காஞ்சிபுரம் காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர். இந்தச் சம்பவம் காவல்துறையில் பெரும் பேசுபொருளாகியிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs