
நேபாளத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை விதிகளுக்கு உட்பட்டு அந்த நாட்டில் இயங்கும் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதள நிறுவனங்களும் பதிவு செய்யப்பட வேண்டும் என ஆளும் பிரதமர் கே.பி.சர்மா தலைமையிலான அரசு அறிவித்தது.
கால அவகாசம் கொடுத்தும் மெட்டா, கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் எந்தவித பதிலும் அளிக்காததால், இன்று (செப்டம்பர் 8) காலை முதல் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட 26 சமூக வலைதளங்களுக்கு தடைவிதித்திருக்கிறது நேபாள அரசு.
Nepal : CALL FOR PROTEST
GEN-Z CALLS FOR PROTEST AGAINST CORRUPTION & SOCIAL MEDIA BAN ON SEPTEMBER 8 AT MAITIGHAR.What is your opinion on this protest? pic.twitter.com/Ck3c9LWb9Q
— Neha Gurung (@nehaGurung1692) September 8, 2025
சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட இந்தத் தடைக்கு எதிராக நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இன்று ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டு போராட்டம் நடத்தியிருக்கின்றனர். போராட்டத்தைக் கலைக்க காவல்துறையினர், பாதுகாப்புப் படையினர் தண்ணீர் அடித்தும், ரப்பர் குண்டுகளால் துப்பாக்கிச்சூடு நடத்தியும் போராட்டத்தைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயற்சித்தினர்.
இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 19 பேர் உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது. 300க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த உயிரிழப்பிற்கு வருத்தம் தெரிவிக்கும் வகையில், அந்நாட்டின் உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதால் மக்களிடைய கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கிறது. தலைநகரில் மட்டும் வெடித்த இப்போராட்டம் மாவட்டங்கள் தோறும் பரவி வருவதால், நேபாளத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. தடை செய்த சமூக வலைதளங்களுக்கு தடையை நீக்க வேண்டும் என்பதே போராடும் இளைஞர்களின் கோரிக்கையாக இருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs