
நடிகை அவந்திகா மோகன்
துபையில் பிறந்து வளர்ந்த அவந்திகா மோகன், மாடலிங் துறையிலிருந்து நடிப்பு துறைக்கு வந்தவர். ‘யக்ஷி ஃபெய்த்ஃபுல்லி’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிப்பு உலகில் அடியெடுத்து வைத்த இவர், தமிழ், மலையாளம், கன்னட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
பின்னர் சின்னத்திரையில் தன் கவனத்தை முழுவதுமாக செலுத்தி வருகிறார். ‘ஆத்மசகி’ என்ற தொடர் மூலம் பார்வையாளர்களின் மனதை கவர்ந்த நடிகை அவந்திகா மோகன், ‘தூவல் ஸ்பர்ஷம்’, ‘மணிமுத்து’ போன்ற தொடர்களிலும் குறிப்பிடத்தக்க நடிப்பைக் வெளிப்படுத்தி தனக்கென ரசிகர்களை உருவாக்கியிருக்கிறார்.
என் குட்டி ரசிகன்
இந்த நிலையில், 17 வயது சிறுவனிடமிருந்து திருமண கோரிக்கை வந்தது தொடர்பாக தன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்திருக்கிறார். அவரின் பதில், ‘என் குட்டி ரசிகன்’ என்று குறிப்பிட்டுக்கொண்டு அவந்திகாவின் பதிவு தொடங்குகிறது.
“நீ சில காலமாக எனக்கு செய்திகள் அனுப்பிக் கொண்டிருக்கிறாய். உன்னிடம் நேர்மையாக ஒரு விஷயம் சொல்ல விரும்புகிறேன். நீ மிகவும் இளமையானவன். 16 அல்லது 17 வயது. வாழ்க்கை என்னவென்று நீ புரிந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறாய்.
திருமணம் செய்ய கோரிக்கை
“என்னை திருமணம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஒரு வருடமாக நீ செய்திகள் அனுப்புகிறாய். நீ அதில் உறுதியாக இருக்கிறாய். ஆனால் நீ திருமணத்தைப் பற்றி அல்ல, பரீட்சைகளைப் பற்றித்தான் இப்போது கவலைப்பட வேண்டும்.
என்னைவிட உனக்கு எவ்வளவோ வயது குறைவு. நாம் திருமணம் செய்துகொண்டால், உன் மனைவியாக அல்ல, அம்மாவாகத்தான் மக்கள் என்னைப் பார்ப்பார்கள்.
எனவே, இப்போது படிப்பில் கவனம் செலுத்து. உன் காதல் சரியான நேரத்தில் உன்னைத் தேடி வரும். அன்புடன், ஆசிர்வாதங்களுடன், அவந்திகா”
என்ற அந்த சிறுவனுக்கு அளித்த பதில் சமூக ஊடகங்களில் வைரலாகிவிட்டது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…