• September 8, 2025
  • NewsEditor
  • 0

கும்பகோணம் ஒட்டிய மேலக்காவேரி பகுதி மடத்துத் தெருவில் காபி கொட்டைகளின் நறுமணத்துடன், மிட்டாயும் மணக்கிறது.

அந்த மணம் அப்படியே நம்மை ‘தமிழ்செல்வன் மிட்டாய் கடை’க்கு அழைத்துச் செல்கிறது.

“பதினோரு வயசுல இருந்து மிட்டாய் வேலை பாத்துக்கிட்டு இருக்கேன்பா” என்று முகம் நிறைந்த சிரிப்புடன் நம்மை வரவேற்று பேசத் தொடங்குகிறார் அந்தக் கடையின் உரிமையாளர் காமராஜ்.

“சின்ன வயசுல எனக்கு படிப்பு வரல. அதனால, ஆறாம் வகுப்பைத் தாண்டல. படிப்பை விட்டுட்டு கிடைச்ச சின்னச் சின்ன வேலைகளைச் செஞ்சுகிட்டு இருந்தேன்.

காமராஜ், அவரது குடும்பம் | தமிழ்செல்வன் மிட்டாய் கடை

அப்படி தான் லாட்டரி சீட்டு விக்கத் தொடங்குனேன். அப்போ ஒரு ஐயா கூட பழக்கமாகி, அவர்கிட்ட மிட்டாய் போடும் வேலைல சேர்ந்தேன். அப்போ எனக்கு பதினோரு வயசு.

அவர்கிட்டேயே வேலை கத்துகிட்டு, அவரோடேயே இருபது வருசம் இருந்தேன்.

அப்புறம், நானா சொந்தமா ஒரு கம்பெனி வெச்சேன். எங்க கம்பெனில அப்போ நான், என் அம்மா, மனைவி மூணு பேரும் தான் வேலையாட்கள். கடுமையா உழைச்சோம். அம்மாவோட ஆதரவும், மனைவியின் ஒத்துழைப்பும் எங்களைப் படிப்படியா நல்ல நிலைமைக்கு இப்போ கூட்டிட்டு வந்திருக்கு” என்கிற காமராஜுக்கு இப்போது வயது ஐம்பத்து ஐந்து.

‘இதை கம்பெனி, கடைனு சொல்றதை விட, வீடுனு சொல்றது தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

இங்க நாங்க தேன் மிட்டாய், கடலை மிட்டாய், எள்ளு மிட்டாய், ஆட்டுக்கால் கேக், பால் பன், காஜா பூரி…னு நிறைய மிட்டாய் வகைகளைச் செஞ்சு விக்கறோம்.

கையில இருந்த கொஞ்ச காசை போட்டு தொழிலை ஆரம்பிச்சோம். அப்போ ஒரு வாரத்துக்கே ஒரு மைதா மூட்டைல தான் எங்க தயாரிப்பு இருக்கும். ஆனா, இப்போ ஒரு நாளைக்கு ஒரு மைதா மூட்டைக்கும் மேல போட்டு தயாரிக்கிற நிலைமைக்கு வந்துருக்கோம்.

தமிழ்செல்வன் மிட்டாய் கடை
தமிழ்செல்வன் மிட்டாய் கடை

அதுமட்டுமில்ல, நாங்க கும்பகோணத்துல மட்டும் எங்க மிட்டாய்களைச் சப்ளைப் பண்ணல. கும்பகோணத்தை ஒட்டியிருக்கிற அரியலூர், ஜெயங்கொண்டம், வளைங்கமான் போன்ற ஊர்களுக்கும் ஏஜென்சி மூலமா மிட்டாய்களைச் சப்ளை செய்யறோம்” என்கிற காமராஜின் கடையில் இப்போது ஏழெட்டு பேர் வேலை செய்துவருகின்றனர்.

“ஆரம்பத்துல நான், அம்மா, மனைவி மட்டும் தான் வேலை செஞ்சுகிட்டு இருந்தோம். பிசினஸ் வளர வளர ஆட்கள் தேவைப்பட்டாங்க. சும்மா ஆட்களை எடுக்காம, வேலை மிகவும் தேவைப்படுகிற ஆட்களை வேலைக்கு எடுத்தோம்.

இவங்க இல்லாம, மாற்றுத்திறனாளிகள், கணவரை இழந்தவர், கொஞ்சம் வயசானவங்க… இந்த மாதிரியான ஆட்களும் வாரத்துல மூணு நாளு இங்க வந்து சின்ன சின்ன வேலைகளைச் செஞ்சு தருவாங்க. அதுக்கு அவங்களுக்கான சம்பளத்தைக் கொடுத்துடுவோம்” என்று தனது கடையின் தனித்தன்மையை விளக்குகிறார்.

“இவ்ளோ வருசமா நாங்க தொழில்ல இருக்கறதுக்கும், எங்க பிசினஸ் இவ்வளவு வளர்ந்திருக்கிறதுக்கும் எங்களோட தரமும், சுவையும் முக்கிய காரணம்.

மிட்டாய்களுக்கு போடற ஒவ்வொரு பொருளும் பாத்து பாத்து தரமா தான் போடுவோம். ஒவ்வொரு இனிப்பு பண்டங்களிலும் ஒரு நாளைக்கு அதிகபட்சம் நூறு டப்பாக்கள் சப்ளை செஞ்சுடுவேன்.

ஒரு டப்பாவிற்கு பத்துல இருந்து பதினைஞ்சு ரூபா லாபம் வரும். மாசத்துக்கு எப்படியும் கிட்டத்தட்ட ரூ.40,000 லாபம் கிடைக்கும்” என்று உற்சாகமாக பேசிக்கொண்டிருந்தவரின் குரலில் இப்போது மென்சோகம் எட்டிப்பார்க்கிறது.

தமிழ்செல்வன் மிட்டாய் கடை உரிமையாளர், தொழிலாளர்கள்

“முன்ன மாதிரி இப்போது சின்ன தொழில்களுக்கு வரவேற்பும், வருமானமும் இல்லை. குடிசை தொழிலாளி வாங்கற அளவுக்கான விலையில் தரமான பொருள்கள் கிடைக்கறது இல்லை.

எப்படியோ செஞ்சு கொடுத்தாலும், மக்கள் இந்த மிட்டாய்களை விருப்பப்பட்டு வாங்கறது இல்லை. அதனால, குடிசை தொழில்கள் கொஞ்சம் கொஞ்சமா மறைஞ்சுகிட்டு வருது… அழிஞ்சுகிட்டு வருது.

இந்தத் தொழில்கள் தான் ஒரு காலத்துல மக்களோட சுவையா இருந்து இப்போ அழிஞ்சுட்டு வருதுங்கறது மிகப்பெரிய வருத்தம்” என்று சோகத்துடன் சொன்ன காமராஜ், குடிசை தொழிலாளர்களுக்கு சூப்பர் டிப்ஸை வழங்குகிறார்.

“ஒரு காலத்துல கும்பகோணத்துல அதிகம் இருந்த மிட்டாய் தொழில், இப்போ அவ்வளவா இல்லை.

நான் முதல்ல தேன் மிட்டாய் தான் வியாபாரம் செஞ்சுகிட்டு இருந்தேன். ஆனா, இதையே தொடர்ந்து செஞ்சுகிட்டு இருந்தோம்னு, நாம சீக்கிரம் காணாம போயிடுவோம்னு, மார்க்கெட்டுக்கு ஏத்த மாதிரி சுவையான, தரமான வித விதமான மிட்டாய்களை தயாரிக்க ஆரம்பிச்சேன். இதுவும் என் பிசினஸோட வெற்றிக்கு முக்கிய காரணம்.

அதனால, சிறு தொழிலாளர்கள் அவங்களோட பகுதிக்கும், காலத்திற்கும், மார்க்கெட்டுக்கும் ஏத்த மாதிரி அவங்களை தகவமைச்சுக்கணும்” என்று சிரிப்புடன் நமக்கு விடைகொடுக்கிறார் காமராஜர்.

தமிழ்செல்வன் மிட்டாய் கடை
தமிழ்செல்வன் மிட்டாய் கடை
தமிழ்செல்வன் மிட்டாய் கடை
தமிழ்செல்வன் மிட்டாய் கடை
தமிழ்செல்வன் மிட்டாய் கடை
தமிழ்செல்வன் மிட்டாய் கடை
தமிழ்செல்வன் மிட்டாய் கடை
தமிழ்செல்வன் மிட்டாய் கடை
தமிழ்செல்வன் மிட்டாய் கடை
தமிழ்செல்வன் மிட்டாய் கடை
தமிழ்செல்வன் மிட்டாய் கடை
தமிழ்செல்வன் மிட்டாய் கடை
தமிழ்செல்வன் மிட்டாய் கடை
தமிழ்செல்வன் மிட்டாய் கடை
தமிழ்செல்வன் மிட்டாய் கடை
தமிழ்செல்வன் மிட்டாய் கடை
தமிழ்செல்வன் மிட்டாய் கடை
தமிழ்செல்வன் மிட்டாய் கடை
தமிழ்செல்வன் மிட்டாய் கடை
தமிழ்செல்வன் மிட்டாய் கடை

Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

வணக்கம்,

Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.

கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…

https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *