
ஹைதராபாத்: பிஜு ஜனதா தளம் (பிஜேடி) கட்சியைப் போலவே, பாரத் ராஷ்ட்ர சமிதி (பிஆர்எஸ்) கட்சியும் குடியரசு துணைத் தலைவர் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் செயல் தலைவர் கே.டி.ராமா ராவ், "குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பிஆர்எஸ் எம்பிக்கள் வாக்களிக்க மாட்டார்கள். கட்சித் தலைவரும் தெலங்கானா முன்னாள் முதல்வருமான கே.சந்திரசேகர ராவின் தலைமையில் நடைபெற்ற கட்சியின் உயர்மட்டக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.