
சென்னை: அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன் வழங்குவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் உள்ள அனைத்து பணிமனைகளிலும் போக்குவரத்து தொழிலாளர்கள் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன் வழங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு சார்பில், தமிழகம் முழுவதும் கடந்த மாதம் 18ம் தேதி முதல் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.