
இங்கிலாந்தில் உள்ள ஒரு இந்திய உணவகத்தில் சாப்பிட்ட பிறகு தங்களது கட்டணங்களை செலுத்தாமல் சில குடும்பங்கள் சென்றுள்ளன. இங்கிலாந்தின் கிரேட்டர் மான்செஸ்டரில் அமைந்துள்ள சாய் சுர்பி உணவகத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதுகுறித்து உணவகத்தின் உரிமையாளர் ராமன் கவுர் மற்றும் நரிந்தர் சிங் அத்வா ஆகியோர் தங்களது அனுபவங்கள் குறித்து சமூக ஊடகத்தில் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
அதில் செலுத்தப்படாத பில்லின் புகைப்படமும் இடம்பெற்றிருந்தன. அவர்கள் சாப்பிட்ட உணவின் மொத்த பில்லின் தொகை £200 (இந்திய ரூபாய்க்கு 23 ஆயிரத்து 500 ரூபாய்) தாண்டியுள்ளது.
வைரலாகும் பதிவின்படி, “ஆகஸ்ட் 30ஆம் தேதியன்று நான்கு பெரியவர்கள் மற்றும் நான்கு குழந்தைகள் அடங்கிய இரு குடும்பங்கள் உணவகத்திற்கு வருகை தந்தனர். உணவு மற்றும் சேவையை பாராட்டினர்.
ஆனால் பணம் செலுத்தும் நேரம் வந்தபோது, முதலில் பணம் செலுத்த கார்டுகள் மூலம் முயற்சித்துள்ளனர். அதன் பின்னர் பணத்தை மாற்ற நண்பர்களை தொடர்பு கொள்வது போல் காட்டிக்கொண்டனர்.
இறுதியில் இரண்டு குடும்பங்களும் பணம் கொடுக்க வழி இல்லாமல் மன்னிப்பு கேட்ட போது தான் கடைசியில் தெரியவந்தது அவர்களிடம் பணமும் இல்லை கார்டும் இல்லை என்று.
உணவருந்தியவர்கள் மறுநாள் பணம் செலுத்துவதாக உறுதியளித்து ஒரு பெயரையும் தொலைபேசி எண்ணையும் விட்டு சென்றனர். ஆனால் அவர்கள் அவ்வாறு அடுத்த நாள் வந்து பணம் செலுத்தவில்லை.
200 பவுன் பணம் செலுத்தாமல் இருப்பது எங்கள் உணவகத்திற்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஒரு முறை இது போன்ற சம்பவங்கள் நடத்தால் மீண்டும் மீண்டும் நடப்பதற்கான வாய்ப்புகள் இருக்கும், இதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று கூறி அந்த உரிமையாளர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே…!