
அதிமுக பொதுச்செயலாளரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி ‘மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் சட்டமன்றத் தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
கடந்த வாரம் 18-08-2025 தேதி அன்று வேலூர் அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதியில் பேசிக்கொண்டிருந்தபோது கூட்டத்தின் நடுவே ஆம்புலன்ஸ் வந்தது. இதனால் எரிச்சலான எடப்பாடி பழனிசாமி, “ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கூட்டத்திலும் ஆம்புலன்சை விட்டு பிரச்னை செய்துகொண்டு இருக்கிறீர்கள். நான் பேசிய 30 கூட்டங்களிலும் ஆம்புலன்ஸ்களை இடையூறாக விட்டு உள்ளனர்.
இதன் மூலம் எச்சரிக்கை விடுக்கிறேன். அடுத்த கூட்டத்தில் ஆம்புலன்ஸ் வந்தால் அந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அதில் நோயாளியாக மருத்துவமனைக்குச் செல்வார். இதுகுறித்து காவல் துறையில் நிர்வாகிகள் புகார் அளிக்க வேண்டும்” என்று பேசியிருந்தார்.
இதையடுத்தும் ஆம்புலன்ஸ் வந்தபோது ஓட்டுநரை அதிமுகவினர் ஆத்திரத்தில் தாக்க முயன்றனர். இது சர்ச்சையை ஏற்படுத்தி பேசுபொருளாகியிருந்தது.

இந்நிலையில் இதுகுறித்துப் பேசியிருக்கும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “எதிர்க்கட்சித் தலைவருக்கு நான் தெரிவிக்க விரும்புவது என்னவென்றால், நீங்கள் ஆம்புலன்ஸ் வண்டிகளை நிறுத்த முயற்சி செய்கிறீர்கள். ஆனால் உங்களோட கட்சியையே விரைவில் ஆம்புலன்ஸ் வண்டியில் ஏற்றக்கூடிய நிலைமையை தமிழ்நாட்டு மக்கள் ஏற்படுத்துவார்கள். விரைவில் உங்கள் இயக்கம் ஐசியூவில்தான் அனுமதிக்கப்படும்” என்று பேசியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs