
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனரும் தலைவருமான வைகோவுக்கும், மதிமுக-வின் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யாவுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு நிலவி வந்த நிலையில்,
வைகோ, மதிமுக துணைப் பொதுச் செயலாளர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்தும் மல்லை சத்யாவை நீக்கியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, மல்லை சத்யா இன்று (செப். 8) செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்துள்ளார்.
“கடந்த நான்கு ஆண்டுகளாக மதிமுக, மகன் திமுகவாக மாறிவிட்டது. தன்னுடைய மகனுக்காக கட்சிக்காக உழைத்த எங்களை போன்றோரை இழந்துவிட்டார்.
எப்போது பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்ததைப் போல, நான் அவருக்கு துரோகம் செய்துவிட்டேன் என்று சொன்னாரோ, அன்றே காசு கொடுத்த வாங்கிய கட்சி வேட்டிகளை அவிழ்த்து விட்டோம்.”
காரில் பறக்கும் கட்சி கொடிகளை அகற்றிவிட்டோம். என்னுடைய வாழ்க்கையில், வசந்த காலமான 32 ஆண்டுகளைக் கட்சிக்காக நான் இழந்திருக்கிறேன்.
ஆனாலும், அதில் எனக்கு ஒரு மனநிறைவு இருக்கிறது. என் மீதான நடவடிக்கை எதிர்பார்த்த ஒன்றுதான்.

தனது மகன் குறித்து வைகோ சிந்திக்கிறார். ஒரு தலைவராக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தோற்றுவிட்டார். ஜனநாயக படுகொலை செய்திருக்கிறார் ” என்று விளக்கம் அளித்துள்ளார்.