• September 8, 2025
  • NewsEditor
  • 0

பொதுவாக மற்றைய ஆயுதங்களை விட மனிதர்களை, அவர்களின் நுண்ணுணர்வுகளை ஆழமாக ஊடுருவக்கூடிய ஆயுதமாக புத்தகங்களே இருக்கின்றன.

வாசிப்பு எப்படி நமக்கு இன்பம் கொடுக்கிறதோ அதைப்போல் நமக்குக் கிடைக்கிற சின்ன சின்ன நேரங்களையும் பயனுள்ளதாக ஆடியோ வடிவில் கேட்டுப் பயன்பெறுவதை நம் மனதை இன்னும் சுவாரசியமாக்குகிறது.

அப்படி இந்த ஆகஸ்ட் மாதத்தில் உங்களைச் சுவாரசியமாக்கி விகடன் பிளேயில் அதிகம் கேட்கப்பட்ட 5 ஆடியோ புத்தகங்களை இங்கே பட்டியலிட்டிருக்கிறோம்.

நான் ஒரு ரசிகன்

நான் ஒரு ரசிகன் :

ஆனந்த விகடனில் 1993 காலகட்டத்தில் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனால் சுயசரிதை தொடராக எழுதப்பட்டு வெளிவந்தது.

ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலம் தன் இசையால் தமிழ்த்திரையுலகைத் தாலாட்டி நம்மால் இன்றும் எம்.எஸ்.வி என்று போற்றப்படும் மனையங்கத்து சுப்ரமணியன் விஸ்வநாதன் தன் பள்ளிக்காலத்தில் இசையால் ஈர்க்கப்பட்டு, திரைப்பட தயாரிப்பு அலுவலக ஊழியராக, ஆர்கெஸ்ட்ரா உதவியாளராக தன் இசை இழுத்துச்சென்ற பயணத்தை இசையையே தன் வாழ்வாக்கிக்கொண்ட கலைஞன் எழுதிய சுயசரிதை இசையே இந்த ’நான் ஒரு ரசிகன்’ புத்தகம்.

இந்த ஆகஸ்ட் மாதத்தில் வாசகர்களால் அதிகம் கேட்கப்பட்ட ஆடியோ புக் என்ற இடத்தைப் பிடிக்கிறது.

நான் ஒரு ரசிகன் தொடரைக் கேட்க, Click here

https://www.vikatan.com/vikatan-play/naan-oru-rasigan-audio-series

இருமுடிச்சோழன்
இருமுடிச்சோழன்

இருமுடிச்சோழன்:

சோழர்களின் வரலாற்றில் ‘சுங்கம் தவிர்த்த சோழன்‘ என்றழைக்கப்படும் குலோத்துங்கச் சோழன் தான் சரிவை நோக்கிச் சென்று கொண்டிருந்த சோழ மரபைத் தூக்கி நிறுத்தியவன்.

இந்தக் குலோத்துங்க சோழனின் இளமைக்கால சம்பவங்களைக் கொண்டு புனையப்பட்ட வரலாற்று கதை இருமுடிச்சோழன்.

சோழர்களின் வரலாற்றுக் காலத்துக்கே அழைத்துச் செல்லும் இருமுடிச்சோழன் வாசகர்களின் பேராதர்வோடு இரண்டாம் இடத்தைப் பிடிக்கிறது.

சோழர்களின் வரலாற்றுக் காலத்தை நீங்களும் கேட்க, கீழே கிளிக் செய்யுங்கள்.

https://www.vikatan.com/vikatan-play/irumudi-chozhan-ula-audio-series

நாக முத்திரை
நாக முத்திரை

நாக முத்திரை:

கேரளப் பகுதியில் ஆழ்கடலில் இருந்து இதுவரை கேட்காத ஒரு வித்தியாசமான ஒலி வருகிறது.

Raw ஆபிசரான ஆதவன் அந்த ஒலியை எவ்வாறு கண்டுபிடிக்கிறான் என்பதே கதை.

விகடன் பிளேயில் வாசகர்களால் விரும்பி கேட்கப்பட்ட புத்தகமான நாக முத்திரை மூன்றாம் இடத்தைப் பிடிக்கிறது.

நாக முத்திரை புத்தகத்தை ஆடியோ வடிவில் நீங்களும் கேளுங்கள்.

https://www.vikatan.com/vikatan-play/nagamuthirai-audio-series

1984:
1984:

1984:

பிரபலமான எழுத்தாளர் ஜார்ஜ் ஆர்வெல்லால் எழுதப்பட்ட இந்தப் புத்தகம் அதிகாரத்திற்கெதிரான அட்டகாச நாவல்.

நவீன தொழில்நுட்ப வசதிகளோடு அதிபராக பேரதிகாரம் நடத்தும் பெரியண்ணன் அங்கு வாழும் குடிமக்களை அடக்கி ஒடுக்கி வைத்திருக்கிறார். அந்தக் கட்டுப்பாடுகளை மீறி செல்லும் மக்கள் தடயம் தெரியாமல் அழிக்கப்பட்டு ஆளில்லாதவர்களாக அறிவிக்கப்படுகின்றனர். இதனால், மக்கள் அந்தப் பேரரசைப் போற்றும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இவ்வாறு சுவாரசியமான நீள்கிறது 1984.

வாசகர்களால் அதிகம் கேட்கப்பட்ட ஆடியோ புத்தகத்தில் 1984 நான்காம் இடத்தைப் பிடிக்கிறது.

நீங்களும் 1984 புத்தகத்தை ஆடியோ வடிவில் கேட்க,

https://www.vikatan.com/vikatan-play/ninenteen-eighty-four-audio-series

திருச்சிராப்பள்ளி  ஊறும் - வரலாறும்:
திருச்சிராப்பள்ளி ஊறும் – வரலாறும்:

திருச்சிராப்பள்ளி ஊறும் – வரலாறும்:

தமிழ்நாட்டின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் மலைக்கோட்டையின் நகரமான திருச்சிராப்பள்ளிக்கு எத்தனையோ பெருமைகள் உண்டு. திருச்சியில் நடந்த வரலாற்று நிகழ்வுகள், கல்லணையின் வரலாற்றுப் பெருமை, மொழிப்போராட்டம் எனப் பல்வேறு பெருமைகளைத் தாங்கியிருக்கும் திருச்சி மண்ணின் வரலாற்று பெருமைகளைச் சொல்கிறது திருச்சிராப்பள்ளி ஊறும் – வரலாறும்.

ஊரின் வரலாற்றை அறிந்து கொள்ளும் ஆர்வத்தைச் சற்றும் குறைக்காத திருச்சிராப்பள்ளி ஊறும் – வரலாறும் புத்தகம் வாசகர்களால் அதிகம் கேட்கப்பட்ட Audio Bookல் ஐந்தாம் இடத்தைப் பிடிக்கிறது.

திருச்சிராப்பள்ளி ஊறும் – வரலாறும் புத்தகத்தை நீங்களும் கேட்க,

https://www.vikatan.com/vikatan-play/trichirapalli-oorum-varalaaru-audio-series

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *