
விக்டோரியாவின் மலையாள சங்கம் ஏற்பாடு செய்த ஓணம் கொண்டாட்டங்களில் பங்கேற்க மலையாள நடிகை நவ்யா நாயர் ஆஸ்திரேலியா சென்றிருக்கிறார்.
ஓணம் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மல்லிகைப் பூவை பெண்கள் சூடிக்கொள்வது வழக்கம். அதன் அடிப்படையில், கொச்சியிலிருந்து புறப்படும் போதே நவ்யா நாயரின் தந்தை மல்லிகைப் பூவை வாங்கிக் கொடுத்திருக்கிறார்.
அதை இரண்டு துண்டாக வெட்டி முதல் பகுதியை தலையில் சூடியிருக்கிறார். மற்றொன்றை பையில் வைத்து எடுத்துச் சென்றிருக்கிறார்.
ஆனால், ஆஸ்திரேலியாவின் கடுமையான உயிரியல் பாதுகாப்பு சட்டங்களின் கீழ், வெளிநாடுகளிலிருந்து தாவர பொருட்களைக் கொண்டு வருவது தடை செய்யப்பட்டுள்ளது.
இந்தக் குற்றத்துக்குக் கடுமையான அபராதம் விதிக்கப்படுகிறது. இது தொடர்பாக நடிகை நவ்யா நாயர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் ஒரு வீடியோவில், “என் தந்தை எனக்கு மல்லிகைப் பூவை வாங்கித் தந்தார்.
அவர் அதை இரண்டு பாகங்களாக வெட்டி என்னிடம் கொடுத்தார். கொச்சியிலிருந்து சிங்கப்பூர் வரை ஒன்றை என் தலையில் அணிந்து கொள்ளுமாறு கூறினார்.
நான் சென்றடையும் நேரத்தில் அது வாடிவிடும் என்பதால் சிங்கப்பூரிலிருந்து மேற்கொண்டு பயணத்தில் அணிவதற்காக இரண்டாவதை என் கையில் வைத்துக் கொள்ளுமாறு சொன்னார்.
நான் அதை என் கேரி பேக்கில் வைத்தேன். ஆனால், ஆஸ்திரேலியாவுக்கு தாவரங்களைக் கொண்டு செல்லக்கூடாது என்பது எனக்குத் தெரியாது.

ஆனாலும் அது சட்டத்திற்கு எதிரானது. அறியாமை என்பது மன்னிப்பிற்கான காரணம் அல்ல. 15 செ.மீ மல்லிகைப் பூவைக் கொண்டு வந்ததற்காக, அதிகாரிகள் என்னிடம் AUD 1,980 (ரூ.1.14 லட்சம்) அபராதம் செலுத்துமாறு கேட்டார்கள்.
தவறு என்றால் தவறுதான். 28 நாட்களுக்குள் அபராதம் செலுத்தப்பட வேண்டும் என்று அவர்கள் சொன்னார்கள். அபராதம் செலுத்துவதற்கு முன்பான ஒரு பெருமிதம்” எனக் கிண்டலாக வீடியோவைப் பதிவிட்டிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…