
சென்னை: தமிழகத்தில் 4 மண்டலங்களைச் சேர்ந்த போக்குவரத்து ஊழியர்களுக்கு கடன் வழங்குவதை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக போக்குவரத்துக் கழக பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன சேமிப்பு மற்றும் கடன் சங்கம் அறிவித்துள்ளது.
போக்குவரத்துக் கழக பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன சேமிப்பு மற்றும் கடன் சங்கத்தில் சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம், விழுப்புரம் போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் உள்ளிட்டவற்றைச் சார்ந்த பணியாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.