
முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் சொந்த சுற்றுப்பயணம். தமிழகத்திற்கு எந்த நிதியும் வந்தது போல் தெரியவில்லை.
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு மிக மோசமாக உள்ளது. கொலை, கொள்ளை அதிகரித்து வருகிறது. கஞ்சா போதைப் பொருட்கள் குறித்து பலமுறை விழிப்புணர்வு ஏற்படுத்தியும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அண்ணா திமுக ரத்தம்
அ.தி.மு.கவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் கட்சி பதவி பறிக்கப்பட்டுள்ளது. அவர் மூத்த தலைவர்.
அனைவரும் சேர்ந்து ஒரு தலைமையைத் தேர்ந்தெடுத்துவிட்டால், அந்த தலைமையின் கீழ் செயல்பட வேண்டும்.
ஆனால் இவர் பொதுச் செயலாளருக்கு காலக்கெடு கொடுப்பதற்கு அதிகாரம் கிடையாது.
கஷ்டப்பட்டு கட்சியை வளர்த்து கொண்டு போய்க் கொண்டிருக்கும் சூழலில் அவரை தொந்தரவு செய்தால், மக்கள் மற்றும் தொண்டர்கள் எவ்வாறு ஏற்றுக் கொள்வார்கள்?
அவருக்கு ஓடக்கூடிய ரத்தம் அண்ணா திமுக ரத்தம் என்று இன்னொருவர் கூறுகின்றார்.
ரத்தக் கதை
இந்த ரத்தக் கதையை கூறுபவர்தான் இதற்கு பின்னால் இருக்கிறார். “ஓ.பி.எஸ் பதவி வேண்டாம், எங்களை சேர்த்து கொண்டால் போதும்” என்று கூறுகிறார்.
வெளியில் மேடைக்கு மேடை பதவி வேண்டாம் என்றும் கூறுகிறார். “மோடி துணை முதல்வர் பதவி கொடுத்தார்” என்று குறிப்பிடுகிறார்.
இதை பொது வெளியில் கூறலாமா? மேலும், அவர் யாரை ஒன்றிணைக்க வேண்டும் என்று கூறுகிறார்?

அவருடன் எத்தனை பேர் இருக்கிறார்கள்? செங்கோட்டையன் டெல்லிக்கு சென்று வந்து இருக்கிறார். “10 நாள் காலக்கெடு” என்று சொன்னால் பொதுச் செயலாளர் என்ன செய்ய முடியும்?
இந்தச் சதிக்கு பின்னால் “அண்ணா திமுக ரத்தம்” என்று யார் கூறுகிறார்களோ, அவர்கள்தான் உள்ளார்கள்.
ரத்தத்தில் ஏபி பாசிட்டிவ் என்றுதான் இருக்கும். ஆனால் செங்கோட்டையனின் உடம்பில் மட்டும்தான் அ.தி.மு.க ரத்தம் ஓடுகிறதா?” என்றார்.