
சென்னை விமான நிலையத்தில் வரவேற்பு
ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து பயணத்தை முடித்துக்கொண்டு இன்று (செப்டம்பர் 8) தமிழகம் திரும்பிய முதல்வர் ஸ்டாலினுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “ஒரு வாரமாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளில் பயணம் மேற்கொண்டேன். மனநிறைவுடன் திரும்பி இருக்கிறேன்.
வெளிநாட்டு பயணம் மாபெரும் வெற்றி பயணமாக அமைந்துள்ளது. என் வெளிநாட்டு பயணங்களை பொறுக்க முடியாமல் சிலர் புலம்புகிறார்கள்.
வெளிநாட்டு பயணங்களும், இங்கு மேற்கொள்ளும் பயணங்களும் ஒருபோதும் நிற்காது. மிக அதிக அளவிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன்.
`செங்கோட்டையனின் பதவி பறிப்பு’
தூத்துகுடியைப் போன்ற ஓசூரிலும் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த இருக்கிறோம். மத்திய அரசு எவ்வளவு புறக்கணித்தாலும், தமிழக அரசு முன்னோக்கியே செல்லும்,” என்று அவர் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினிடம் செங்கோட்டையனின் பதவி பறிப்பு குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு அவர், “ஆக்கப்பூர்வமான கருத்துகளைப் பேசிட்டிருக்கோம். இப்படி அக்கப்போரான கேள்விகள் எல்லாம் கேக்குறீங்களே… விட்டுடுங்க,” என்று பதிலளித்துள்ளார்.