
தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக வலம் வந்த அஜித் குமார், தன் நடிப்பை குறைத்துக்கொண்டு கார் ரேஸின் பக்கம் கவனம் செலுத்தத் தொடங்கினார்.
கடந்த ஆண்டு ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை அஜித் உருவாக்கினார். இந்த நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் பெற்றுள்ளது. தற்போது ஜெர்மனியில் நடக்கும் கார் ரேஸில் அஜித் பங்கேற்றுள்ளார்.
2025 ரேஸிங் திட்டங்கள்:
தொடர்ந்து 2025 FIA 24H endurance Series-ல் போர்ஷ் கார்களுடன் பங்கேற்ற அஜித்குமார் ரேஸிங் டீம், துபையின் Michelin 24H DUBAI போட்டியில், முழு ஐரோப்பிய சீசனிலும் பங்கேற்பதை உறுதி செய்திருக்கிறது.
தற்போது “மோட்டார்ஸ்போர்ட் மற்றும் பொழுதுபோக்கை இணைக்கும், இரண்டு பார்வையாளர்களையும் ஒரே புள்ளியில் இணைக்கும் லோகோவை அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
அந்த லோகோ ரேஸ் கார் மற்றும் டிரைவர் சூட்களில் அமைக்கப்படும் எனவும் அஜித்குமார்ரேஸிங் இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…