
பெங்களூரு: பாலியல் வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஹாசன் தொகுதியின் முன்னாள் எம்.பி.பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு சிறையில் நூலக எழுத்தர் பணி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அவருக்கு ஒருநாள் சம்பளமாக ரூ.522 வழங்கப்படுகிறது.
இதுகுறித்து சிறைத் துறை அதிகாரிகள் கூறியதாவது: பாலியல் குற்றச்சாட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு இங்கு நூலக எழுத்தர் பணி வழங்கப்பட்டுள்ளது. சக கைதிகளுக்கு புத்தகம் வழங்குவது, படிக்க வழங்கப்பட்ட புத்தகங்களின் பதிவுகளை பராமரிப்பது உள்ளிட்ட பணிகளை அவர் மேற்கொள்ள வேண்டும். இதற்காக அவருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.522 சம்பளம் தரப்படுகிறது.