
சாய்பாஸா: ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பும் மாவட்டத்தில் உள்ள சரண்டா வனப்பகுதியில் நடைபெற்ற என்கவுன்ட்டரில் அமித் ஹஸ்தா என்ற நக்சலைட் சுட்டுக்கொல்லப்பட்டார். இவரது தலைக்கு ரூ.10 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது.
நக்சல் ஒழிப்பு பணியை மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டுள்ளது. சத்தீஸ்கர் மற்றும் ஜார்க்கண்ட் மாநில வனப்பகுதிகளில் நக்சலைட்களை முற்றிலும் ஒழிப்பதற்கான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இதற்கான தேடுதல் வேட்டையில் மத்தியப் படையினர், மாநில போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.