
மும்பையில் நேற்று காலையில் இன்று அதிகாலை வரை விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன. இதனால் மும்பையில் உள்ள கடற்கரையில் அதிகமான குப்பைகள் கிடக்கின்றன. பூஜைபொருட்கள் மற்றும் இதர கழிவுகள் மும்பை கடற்கரை கடற்கரைக் கரைகளில் ஒதுங்கி இருக்கின்றன. இதையடுத்து பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் இன்று காலையில் ஜுகு கடற்கரையை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். மாநகராட்சி கமிஷனர் புஷன் மற்றும் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் ஜுகு கடற்கரையை சுத்தம் செய்யும் பணிக்காக வந்திருந்தனர்.
அவர்களுடன் சேர்ந்து நடிகர் அக்ஷய் குமார், முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மனைவி அம்ருதா பட்னாவிஸ் ஆகியோரும் கடற்கரையை சுத்தப்படுத்தும் வேலையில் ஈடுபட்டனர்.
அக்ஷய் குமார் கடற்கரையில் கிடந்த பூ போன்ற கழிவுகளை கையால் எடுத்து அதனை தொண்டு நிறுவன தன்னார்வலர்கள் எடுத்து வந்த பைகளில் போட்டார். இதில் பேசிய நடிகர் அக்ஷய் குமார்,”தூய்மையை பேணுவதில் பொதுமக்களின் பங்களிப்பு மிகவும் முக்கியம். நாம் தூய்மையைப் பேண வேண்டும் என்பதை ஞானம் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது.
இது நமது பிரதமரால் வலியுறுத்தப்பட்ட ஒரு முக்கிய அம்சமாகும், அவர் தூய்மை என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மாநகராட்சிகளின் பொறுப்பு மட்டுமல்ல, அது பொதுமக்களின் பொறுப்பும் கூட என்று வலியுறுத்தியுள்ளார் என்றார்.
இதில் பேசிய அம்ருதா பட்னாவிஸ்,”தூய்மையைப் பேணுவதற்கும், தூய்மை திட்டத்தைத் தொடங்குவதற்கும் மக்களுக்கு முதலில் செய்தியை வழங்கியது பிரதமர் மோடிதான் என்று நான் நினைக்கிறேன். அதன் விளைவாகத்தான் இன்று இது நடக்கிறது. தூய்மை இயக்கங்களுக்கு வரும் மக்களின் எண்ணிக்கையைப் பாருங்கள், பிரதமரின் வழிகாட்டுதலால்தான் இந்த விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது” என்று அம்ருதா பட்னாவிஸ் கூறினார்.