
இந்தியாவில் தெருநாய்கள் அதிகரித்து வருவது, தெருநாய் கடி காரணமாக உயிரிழப்புகள் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் தெருநாய்களுக்கு ஆதரவானவர்களும், அவற்றை எதிர்க்கும் தரப்பினரும் தங்களது வாதங்களை மாறி மாறி முன்வைத்து வருகின்றனர்.
தெருநாய் தொல்லைகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக அரசு பல்வேறு நடவடிக்கைகள், திட்டங்களை வகுத்து வருகிறது. இதற்கிடையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பொது மக்களும் இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்து வருவதும் பேசுபொருளானது.
இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில், நடிகை அம்மு கலந்துக்கொண்டு தெருநாய்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், கடந்த மாதம் நடந்த சின்னத்திரை நடிகர்கள் சங்கத் தேர்தலில் வெற்றிப்பெற்ற புதிய நிர்வாகிகள் அறிமுக விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய நடிகர் ராதா ரவி, “அம்முவுக்கு ஒரு விஷயம் சொல்ல வேண்டும். இந்த நாயை விட்டால் என்ன? பிடித்தால் என்ன? நீ எதற்கு அந்த விவாதத்திற்கு சென்றாய்? நன்றியுள்ள மிருகம்தான் நாய்.
அதே நேரம் அதை கவனிக்காமல் விட்டால் அது அப்படியே இருக்கும். இப்பொழுதெல்லாம் நாய்க்காக மட்டுமே மரியாதை கொடுக்கிறார்கள்; மனிதர்களுக்கு கொடுப்பதில்லை.

நாய் எப்போதும் நன்றியோடு இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். நாய் கடித்து மட்டுமல்ல, பூனை கடித்தாலும் ரேபிஸ் வரும் என ஒரு மருத்துவர் தெரிவிக்கிறார்.
ஊசி போட்டு ரேபிஸிலிருந்து நம்மை தற்காப்பு செய்யலாம் என்று கூறப்படுகிறதே. ஆனால் எத்தனை நாய்க்கு ஊசி போட முடியும்? நாய் எச்சில் பட்டாலும் ரேபிஸ் வரும் என்றும் கூறுகிறார்கள்.
தெருநாய்களைப் பிடிக்கக் கூடாது எனச் சொல்பவர்கள் யாரும், அந்த நாய்களை காப்பாற்றப் போவதில்லை. இது அம்முவுக்காக அல்ல, பொதுவாகச் சொல்லும் கருத்து.” என்றார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…