
ஆந்த்ரோபிக் நிறுவனம்
ஆந்த்ரோபிக் நிறுவனம் பதிப்புரிமை மீறல் வழக்கில் 1.5 பில்லியன் டாலர் இழப்பீடு ஒப்புக்கொண்டது
கணினி மென்பொருள் நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic), எழுத்தாளர்களின் பதிப்புரிமை மீறல் வழக்கில், அவர்களுக்கு 1.5 பில்லியன் டாலர் (சுமார் ரூ.12,500 கோடி) இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.
வழக்கில் கூறப்பட்டதாவது, ஆந்த்ரோபிக் தனது கிளாட் (Claude AI) மாதிரியை பரிசோதிக்க, பதிப்புரிமை மீறல் செய்யும் இணையத்தளங்களிலிருந்து சுமார் 5 லட்சம் புத்தகங்களை சட்டவிரோதமாக பதிவிறக்கம் செய்தது என்று குற்றம் சாட்டப்பட்டது.
பதிப்புரிமை மீறல் வழக்கில் தீர்ப்பு
இந்த சம்பந்தமான வழக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்பட்டபோது, ஒவ்வொரு புத்தகத்திற்கும் சுமார் 3,000 டாலர் (சுமார் ரூ.2.5 லட்சம்) இழப்பீடு வழங்கி, சட்டவிரோதமாகப் பெற்ற தரவுகளையும் அழிக்க ஆந்த்ரோபிக் நிறுவனம் ஒப்புக்கொண்டது.
ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் கருத்து
ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் துணை பொது ஆலோசகர் அபர்ணா ஸ்ரீதர் கூறியதாவது:
“சட்டபூர்வமான பயிற்சி முறைக்கு நாங்கள் ஆதரவு தருகிறோம். இருப்பினும், இந்த ஒப்பந்தம் கடந்தகால வழக்குகளைத் தீர்க்க உதவும். நாங்கள் தொடர்ந்து பாதுகாப்பான செயற்கை நுண்ணறிவு அமைப்புகளை உருவாக்குவோம்.” என்றார்.

ஆந்த்ரோபிக் நிறுவனம் இந்த வழக்கைச் சந்திக்காமல் விட்டிருந்தால், 1 டிரில்லியன் டாலர் (சுமார் ரூ.83 லட்சம் கோடி) வரை இழப்பீடு வழங்க நேர்ந்திருக்கும். இந்தத் தீர்வு, அதன் வணிகத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரிய ஆபத்தைத் தவிர்த்துள்ளது.
ஆனால், நிபுணர்கள் குறிப்பிடும் வகையில், இந்தத் தொகை சிறிய செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களுக்கு பெரும் சுமையாக இருக்கலாம்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…