
ஹிருதயபூர்வம்
சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் மோகன்லால், மாளவிகா மோகனன், சங்கீத் பிரதாப், சங்கீதா மாதவன் நாயர் மற்றும் சித்திக் நடிப்பில் வெளியான ஹிருதயபூர்வம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இது, இதயம் மாற்று அறுவைச் சிகிச்சை மூலம் உயிர் பிழைத்திருக்கும் சந்தீப், இதயத்தைத் தானம் செய்தவரின் மகளை சந்திக்கும்போது, அவர்களுடைய வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களையே படத்தின் கதை மையமாகக் காட்டுகிறது.
இந்த ஹிருதயபூர்வம் திரைப்படம், ரசிகர்களால் ஒரு ஃபீல்-குட் (feel-good) அனுபவத்தை வழங்குகிறது என்று பெரிதும் பாராட்டப்படுகிறது.
இந்தப் படத்தில் நடித்த மாளவிகா மோகனன் நடிப்பு ரசிகர்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
முகநூல் பதிவு
இந்நிலையில், நடிகை மாளவிகா மோகனன் தன் முகநூல் பக்கத்தில், “எனது வாழ்வின் முதல் ஆடிஷன் அதுதான்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அது நடந்தபோது அதன் முக்கியத்துவம் எனக்கு புரியவில்லை. ஆனால் யாருக்குத்தான் முதல் ஆடிஷன் ஒரு புகழ்பெற்ற நடிகரால் நடத்தப்படும்? அது வினோதமாகவே இருந்தது.
அப்போது ‘பட்டம்போல’ படத்திற்காக துல்கர் சல்மானுடன் நடிக்க நடிகைத் தேர்வு நடந்து கொண்டிருந்தது. அந்த ஆடிஷனுக்கு நான் சென்றிருந்தேன்.
பிறகு, மம்மூட்டி என்னைப் பார்த்து அந்தப் படத்திற்காக பரிந்துரை செய்தார். அப்படியே என் வாழ்க்கையில் முதல் வாய்ப்பு கிடைத்தது.

இன்று ஹிருதயபூர்வம் படத்திற்கு இவ்வளவு அன்பு கிடைப்பதைப் பார்க்கும்போது, என் பயணம் எங்கிருந்து தொடங்கியது என்று என்னால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.
இந்த திரை உலகிற்குள் நான் வருவதற்கு ஒரு காரணமாக இருந்த அந்த மனிதரைப் பற்றி நினைத்துப் பார்க்கிறேன். இல்லையென்றால், நான் இந்தத் துறைக்கு வந்திருக்க மாட்டேன்.
மம்மூக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். இந்த மந்திரம் நிறைந்த திரைப்பட உலகிற்குள் என்னைக் கொண்டு வந்ததற்கு நன்றி.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
படங்கள்
மாளவிகா மோகன் 2013-ம் ஆண்டு மலையாளம் திரைப்படமான ‘பட்டம் போல்’ மூலம் திரை உலகில் அறிமுகமானார். தொடர்ந்து, 2017-ம் ஆண்டு ‘The Great Father’ படத்தில் மம்மூட்டியுடன் இணைந்து நடித்தார்.
தமிழ் திரையில் அவர் பேட்ட படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். நடிகர் விஜயின் மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர். பாலிவுட்டில் அவர் Beyond the Clouds படத்தின் மூலம் அறிமுகமானார் மற்றும் அதன் பின்னர் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் தொடர்ச்சியாக நடித்துவருகிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…