
மானாமதுரை: “மோடிக்காகவே என்டிஏ கூட்டணியில் இணைந்தேன், நயினார் நாகேந்திரன் கூட்டணியை சரியாக வழிநடத்தவில்லை என்பதாலும், அவர் எடப்பாடி பழனிசாமியை தூக்கிப்பிடித்ததாலுமே கூட்டணியில் இருந்து வெளியேறினன்” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார். மேலும், “எடப்பாடியை ஒருபோதும் ஏற்க மாட்டேன்.” என்றும் தினகரன் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் கூறியதாவது: நயினார் நாகேந்திரன் கூட்டணியை சரியாக வழிநடத்தவில்லை. அவர் எடப்பாடி பழனிசாமியை தூக்கிப்பிடித்தார். இவைதான், நாங்கள் கூட்டணியில் இருந்து வெளியேறியதற்கான முக்கிய காரணம்.