• September 7, 2025
  • NewsEditor
  • 0

பிரபல இந்தி நடிகர் அக்‌ஷய் குமார். ஆரம்பத்தில் சிறிய வேடங்களில் நடித்து வந்த அவர், 1987-ம் ஆண்டு வெளியான ‘சுகந்த்’ என்ற படத்தில் முதன்மை வேடத்தில் நடித்தார். பாலிவுட் ஹீரோக்கள் வருடத்துக்கு ஒரு படம் என நடித்து வரும்போது, இவர் ஒவ்வொரு வருடமும் அதிகமான படங்களில் நடித்து வருகிறார்.

அது அவரை, இப்போது அவருடைய 200-வது படத்துக்கு அழைத்து வந்திருக்கிறது. செப்.8-ம் தேதி, அக்‌ஷய் குமாருக்கு பிறந்த நாள். அன்று அவர் தனது 200-வது படம் பற்றிய அறிவிப்பை வெளியிட இருக்கிறார். அவர் நடித்துள்ள ‘ஜாலி எல்எல்பி 3’, செப்.19-ம் தேதி வெளியாக இருக்கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *