
ஷில்லாங்: தேனிலவு சென்ற போது, கணவனை கொன்ற வழக்கில் சோனம் உட்பட 5 பேருக்கு எதிராக சிறப்பு விசாரணை குழுப் போலீ ஸார் 790 பக்க குற்றப்பத்திரி கையை தாக்கல் செய்துள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்தவர் ராஜா ரகுவன்ஷி. தொழிலதிபரான இவருக்கும் சோனம் என்ற பெண்ணுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திரு மணம் நடைபெற்றது. பின்னர் இருவரும் கடந்த மே மாதம் 21-ம் நேதி தேனிலவுக்கு மேகாலயா மாநிலத்தின் ஷில்லாங் சென் றனர். அங்கு ரகுவன்சி மர்மமான முறையில் கொலை செய்யப்பட் டார். அவரது உடல் பல நாட் களுக்குப் பிறகு ஜூன் 2-ம் தேதி கண்டெடுக்கப்பட்டது. சோனம் தலைமறைவானார்.