
மும்பை: மும்பை நகரில் தாக்குதல் நடத்த லஷ்கர்-இ-ஜிகாதி அமைப்பைச் சேர்ந்த 14 மனித வெடிகுண்டு தீவிரவாதிகள், 34 வாகனங்களில் 400 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிபொருளை வைத்துள்ளதாக மும்பை காவல் துறை உதவி மையத்துக்கு நேற்று முன்தினம் மிரட்டல் வந்தது.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய மும்பை போலீஸார், செல்போன் மூலம் மிரட்டல் விடுத்த அஸ்வின் குமார் சுப்ரா(50) என்பவரை நொய்டாவில் கைது செய்து அவரது செல்போன் மற்றும் சிம் கார்டை பறிமுதல் செய்தனர். அவர் பிஹாரைச் சேர்ந்தவர் என தெரியவந்தது. அவர் மேல் விசாரணைக்காக மும்பை அழைத்துச் செல்லப்பட்டார்.