
புதுடெல்லி: ‘2025 கனடாவில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் மற்றும் தீவிரவாதக் குழுக்களுக்கு நிதியுதவி இடர்பாடுகள்’ என்ற பெயரில் ஒரு ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது.
ஆய்வு முடிவில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கனடாவில் உள்ள பப்பர் கல்சா இன்டர்நேஷனல், சர்வதேச சீக்கிய இளைஞர் ஒருங்கிணைப்பு ஆகிய 2 காலிஸ்தான் தீவிரவாதக் குழுக்களுக்கு கனடாவிலிருந்து நிதியுதவி சென்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது. கனடாவின் ஒட்டாவா உளவு அமைப்பு இந்தத் தகவலை அரசுக்கு அனுப்பியுள்ளது.