
சென்னை விமான நிலையத்தின் குளறுபடிகளுக்கு தீர்வு காணகோரி மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் கிஞ்சரப்பு ராம் மோகன் நாயுடுவுக்கு தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: சென்னை விமான நிலையத்தில் இருந்து மதுரைக்கு விமானத்தில் பயணம் செய்ய செல்பவர்களுக்கு பெரிய அளவிலான மன உளைச்சல் சமீப காலமாக ஏற்படுகிறது. அதற்கான காரணத்தை ஒவ்வொரு பயணியும் அறிந்தே உள்ளனர். சென்னை விமான நிலையத்தில் நிறுத்தப்படும் மதுரைக்கு செல்லும் ஏடிஆர் விமானங்களுக்கு செல்ல, நெடுந்தூரம் பல கி.மீ தொலைவு பேருந்தில் பயணிக்க வேண்டியுள்ளது.