
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள புகழ்பெற்ற தால் ஏரியின் வடக்கு கரையில் ஹஸ்ரத்பால் மசூதி உள்ளது. இதை ஜம்மு காஷ்மீர் முஸ்லிம் வக்பு வாரியம் நிர்வகித்து வருகிறது. இந்த மசூதி புதுப்பிக்கப்பட்டு தேசிய சின்னம் பொறிக்கப்பட்ட திறப்பு விழா பலகை வைக்கப்பட்டது. அதை அடையாளம் தெரியாத நபர்கள் நேற்று முன்தினம் சேதப்படுத்தி உள்ளனர்.
இதுகுறித்து முதல்வரும் தேசிய மாநாட்டு கட்சியின் மூத்த தலைவருமான உமர் அப்துல்லா கூறும்போது, “மசூதியில் உள்ள தேசிய சின்னம் சேதப்படுத்தப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. அதேநேரம், மத வழிபாட்டுத் தலத்தில் தேசிய சின்னம் பொறிக்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழுகிறது.