
2025 ஆசியக் கோப்பைக்கான இந்திய டி20 அணியில் இடம்பிடிக்கத் தவறிய ஸ்ரேயஸ் ஐயர், அடுத்த வாரம் நடைபெற இருக்கும் ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
ஆஸ்திரேலிய ‘ஏ’ அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியா ஏ அணிக்கெதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் (4 நாட்கள்) தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறது.
அதன்படி முதல் டெஸ்ட் போட்டி வருகிற 16-ம் தேதி லக்னோவில் தொடங்க இருக்கிறது. இந்நிலையில் இந்திய ‘ஏ’ அணி வீரர்களை பிசிசிஐ அறிவித்திருக்கிறது.
இதில் இந்திய அணி கேப்டனாக ஸ்ரேயஸ் ஐயர், துணை கேப்டனாக துருவ் ஜுரெல் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். தவிர அபிமன்யு ஈஸ்வரன், என்.ஜெகதீசன், சாய் சுதர்சன், தேவதத் பதிக்கல், ஹர்ஷ் துபே, ஆயுஷ் படோனி, நிதிஷ் குமார் ரெட்டி, தனுஷ் கோட்டியன், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் ப்ரார், கலீல் அஹ்மத், மனவ் சுதார், யஷ் தாக்கூர் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றிருக்கின்றன.