
புதுடெல்லி: உக்ரைன் மீதான ரஷ்ய போரை முன்கூட்டியே முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் குறித்த கருத்துகளை பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோனுடன் பகிர்ந்து கொண்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரனுடன் தொலைபேசியில் கலந்துரையாடினார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "அதிபர் மேக்ரோனுடன் மிகச் சிறந்த உரையாடல் நடைபெற்றது. இந்தியா – பிரான்ஸ் இடையே பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள ஒத்துழைப்பின் முன்னேற்றங்கள் குறித்து நாங்கள் நேர்மறையாக மதிப்பாய்வு செய்தோம்.