• September 6, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழகத்​தில் 46 காவல் நிலை​யங்​கள் சிறந்த காவல் நிலை​யங்​களாகத் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளன. அவற்​றுக்கு பொறுப்பு டிஜிபி வெங்​கட​ராமன் இன்று கோப்​பைகளை வழங்​க​வுள்​ளார். ஆண்​டு​தோறும் செப். 6-ம் தேதி தமிழக காவலர் நாள் கொண்​டாடப்​படும் என நடந்து முடிந்த சட்​டப்​பேரவை கூட்​டத் தொடரில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் அறி​வித்​திருந்​தார்.

1859-ம் ஆண்டு மெட்​ராஸ் மாவட்ட காவல் சட்​டம் நிறைவேற்​றப்​பட்ட செப். 6-ம் தேதியை அடிப்​படை​யாக வைத்து காவலர் நாள் கொண்டாடப்​படும். அன்​றைய தினம் சிறந்த காவல் நிலை​யங்​கள் தேர்வு செய்​யப்​பட்டு முதல்​வரின் கோப்பை வழங்​கப்​படும் என தெரி​வித்​திருந்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *